Enable Javscript for better performance
திமுக ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    முந்தைய திமுக ஆட்சியில் தமிழகத்தில் நடைபெற்ற சாதனைகள் குறித்து சமூக வலைதளங்களில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டுமென கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
    கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு, தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை வகித்தார்.
    மாவட்ட பிரதிநிதி கி.வே.ஆனந்தகுமார், ஒன்றிய நிர்வாகிகள் வேதாச்சலம், சுகுமார், திருமலை, கணேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் மு. பாஸ்கரன் வரவேற்றார். கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், மேற்கு ஒன்றியச் செயலாளர் மு.மணிபாலன், முன்னாள் ஒன்றியப் பொறுப்பாளர் வெங்கடாசலபதி, கவிஞர் ஆழியாதன், பேரூர் செயலாளர் அறிவழகன் உள்ளிட்டோர்கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து பேசினார்கள். இதில், திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளர் கி.வேணு பேசுகையில், உள்ளாட்சித் தேர்தலுக்கு கட்சியினர் தயாராகும்படியும், சமூக வலைதளங்களை கட்சி வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் வகையில் திமுக-வின் கடந்த கால ஆட்சிகளில் செய்யப்பட்ட சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்து பிரசாரம் செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.
    மேலும், இக்கூட்டத்தில் மார்ச்-1 ஆம் தேதி இளைஞர் எழுச்சி நாளை அனைத்து கிராமங்களிலும் நல உதவிகளோடு கொண்டாட வேண்டும் என்றும், மார்ச் 24-25இல் ஈரோட்டில் நடைபெற உள்ள திமுக மண்டல மாநாட்டில் திரளானோர் பங்கேற்க வேண்டும் என்றும் தீர்மானம் இயற்றப்பட்டது.
    நிகழ்வில் நிர்வாகிகள் ரமேஷ், அக்கீம், எம்.செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai