Enable Javscript for better performance
நீர்வரத்துக் கால்வாய் மீது சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    நீர்வரத்துக் கால்வாய் மீது சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

    By DIN  |   Published on : 09th February 2018 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொன்னேரியில் நீர் வரத்துக் கால்வாய் மீது சாலை அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    பொன்னேரியை அடுத்த வேண்பாக்கம் ரயில்வே கேட் அருகே இருந்த 70-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதாகக் கூறி, வருவாய்த் துறையினர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குடியிருப்புகளை அகற்றினர்.
    அகற்றப்பட்ட குடியிருப்பு வாசிகளுக்கு சின்ன வேண்பாக்கம் பகுதியில் மாற்று இடம் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் பொன்னேரி பேரூராட்சி நிர்வாகத்தினர் சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
    இந்நிலையில் வேண்பாக்கம் ஏரியில் இருந்து ஆலாடு ஏரிக்குச் செல்லும் நீர்வரத்து கால்வாய் மீது சாலை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த வருவாய்த் துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதன் பின்னர் அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai