Enable Javscript for better performance
பெற்றோர்களுக்கு மாணவர்கள் பாதபூஜை- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளூர் அருகே சேவாலயாவில் பெற்றோர்களுக்கு மாணவர்கள் பாத பூஜை செய்தனர்.
    கசுவா கிராமத்தில் சேவாலயா வளாகத்தில் உள்ள பாரதியார் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்யும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
    நிகழ்வுக்கு சேவாலயா அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் முரளிதரன் தலைமை வகித்தார். இதில், மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோரை மதித்துப் போற்ற வேண்டும். இதை வலியுறுத்தும் நோக்கத்தில் மாணவர்கள் தங்களது பெற்றோரின் பாதங்களை நீரால் சுத்தம் செய்தனர். தொடர்ந்து சந்தனம், குங்குமம் வைத்து பூக்கள் தூவி வழிபாடு செய்தனர். பின்னர் பெற்றோர் தங்களது குழந்தைகளை வாழ்த்தி ஆசிர்வாதம் செய்தனர்.
    நிகழ்வில் மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற முதுமொழியை பள்ளிப் பருவத்தில் இருந்தே மாணவர்கள் உணர்ந்து ஒழுக்கத்துடன் திகழ வேண்டும். இதற்காக இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai