Enable Javscript for better performance
பொன்னேரி கிளை நூலகம் நடத்திய குரூப்-4 மாதிரி தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    பொன்னேரி கிளை நூலகத்தில், குரூப்-4 தேர்வு எழுதுபவர்களுக்கு வழிகாட்டும் விதமாக 'மாதிரி தேர்வு' வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் வரும் 11-ஆம் தேதி குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, பொன்னேரி தேரடி சாலையில் அமைந்துள்ள கிளை நூலகத்தில் குரூப்-4 தேர்வுக்கான மாதிரி தேர்வு நடத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இதேபோல், பொன்னேரி அரசுக் கல்லூரியிலும் குரூப்-4 மாதிரி தேர்வுகள் கிளை நூலகம் சார்பில் நடத்தப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai