Enable Javscript for better performance
முள்புதரில் இருந்து ஆண் சடலம் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளூர்-பூந்தமல்லி சாலையோர முள்புதரில் இருந்து அழுகிய நிலையில் ஆண் சடலத்தை மீட்டு, போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது: திருவள்ளூர் அருகே அரண்வாயல் கிராமத்தில், அப்பகுதியைச் சிலர் சாலையோரம் நடந்து சென்றுள்ளனர். அப்போது, முள்புதரில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
    இதைத் தொடர்ந்து அங்கு பார்த்தபோது, 40 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது.
    தகவலறிந்து வந்த போலீஸார், முள்புதரில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai