Enable Javscript for better performance
100 நாள் வேலை கேட்டு முற்றுகைப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    100 நாள் வேலை கேட்டு விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தினர், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சோழவரம் ஒன்றியத்தில் உள்ள புதூர், திருநிலை, அருமந்தை, ஆத்தூர், காரனோடை, சோழவரம், பாடியநல்லூர், அலமாதி, நல்லூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அண்மைக்காலமாக தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
    மேலும் ஏற்கெனவே இத்திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு முழுமையான ஊதியம் வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
    இதையடுத்து அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்க திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் கோதண்டம் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
    இதில், 100 நாள் வேலை வழங்கக் கோரியும், நிலுவையில் உள்ள ஊதியத்தை விரைந்து வழங்க வலியுறுத்தியும் விவசாயிகள் கோஷங்கள் எழுப்பினர்.
    அப்போது, அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், விரைவில் 100 நாள் வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai