Enable Javscript for better performance
6 இடங்களில் இன்று 'அம்மா' திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பொதுமக்கள் பயன்பெறும் நோக்கத்தில் 6 இடங்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை ( பிப்ரவரி 9) நடைபெற இருப்பதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கவும், நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான மனுக்களை அளிக்கவும் வாரந்தோறும் அம்மா திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    முகாமில் அனைத்துத்துறை அதிகாரிகளும் பங்கேற்க இருக்கின்றனர். அதோடு, பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட இருக்கிறது.
    இதில் வெள்ளிக்கிழமை ( பிப்ரவரி 9) முகாம் நடைபெறும் இடங்கள்: பொன்னேரி-உப்புநெல்வாயலில் கிராம நிர்வாக அலுவலக வளாகம் அருகிலும், திருத்தணி -சின்னம்மாபேட்டையில் கிராம நிர்வாக அலுவலகம் அருகிலும், ஊத்துக்கோட்டை-தண்டலத்தில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் அருகிலும், கும்மிடிப்பூண்டி-நெல்வாய் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எதிரிலும், திருவள்ளுர்-பிரியாங்குப்பத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் குடியிருப்பு அருகிலும், பள்ளிப்பட்டு-கர்லாம்பாக்கத்தில் கிராம நிர்வாக அலுவலகம் அருகிலும் அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
    இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மனு அளித்து பயன்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai