Enable Javscript for better performance
அங்காளீஸ்வரி அம்மன் கோயில் தீமிதி உற்சவம்- Dinamani

சுடச்சுட

    

    செங்குன்றம் அருகே, அங்காளீஸ்வரி அம்மன் கோயில் தீமிதி உற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
     பாடியநல்லூர் பர்மா நகரிலுள்ள அங்காளீஸ்வரி அம்மன் கோயிலில் 53 ஆண்டுகளாக தீமிதி உற்சவம் நடைபெற்றுவருகிறது.
     இந்த ஆண்டு தீமிதி உற்சவம் வியாழக்கிழமை (மார்ச் 22) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர்.
     உற்சவத்தை முன்னிட்டு தொடர்ந்து 10 நாள்களுக்கு அம்மனுக்கு தீபதூப ஆராதனைகளும், சிறப்பு அபிஷேகங்களும் நடைபெறும்.
     தினந்தோறும் பாடியநல்லூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் அம்மன் திருவீதியுலாவும், தொடர்ந்து, ஏப்ரல் 1-ஆம் தேதி தீமிதி உற்சவமும் நடைபெறுகிறது.
     இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத் தலைவர் எஸ்.மனோகரன், செயலாளர் ஜி.ராஜேந்திரன், அறங்காவலர் பி.கார்மேகம், பொருளாளர் கே.வேலாயுதம் மற்றும் அன்னதானக் குழு தலைவர் டி.சி.எம்.முனியாண்டி, செயலாளர் ஜி.செல்வராஜ், பொருளாளர் வி.ஆனந்தன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai