Enable Javscript for better performance
அரசுப் பள்ளி ஆண்டு விழா- Dinamani

சுடச்சுட

    

     கும்மிடிப்பூண்டி அருகே, பூவலை அகரம் அரசு நடுநிலைப்பள்ளியின் ஆண்டு விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
    இந்த விழாவிற்கு கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கே.
    முனிராஜசேகர் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை லிடியா சந்திர லீலா வரவேற்றார். விழாவில், வட்டார வளமைய மேற்பார்வையாளர் வி.கே.புனிதவதி, ஆரம்பாக்கம் குறுவள மைய ஆசிரியர் பயிற்றுனர் எம்.காயத்ரி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். பள்ளி ஆண்டறிக்கையை ஆசிரியை சாந்த ஷீலா வாசித்தார்.
    தொடர்ந்து, மாணவர்கள் பங்கேற்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையடுத்து, மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திருவிழாவில், கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் டி.
    பிரவீண்குமார், ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற இ.சிவா, கதை சொல்லுதல் போட்டியில் வெற்றி பெற்ற ஆர்.ராகுல், தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற ஆர்.ராகேஷ் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் ஆகியோரை பாராட்டி பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
    நிகழ்வில், பொதுமக்கள், பள்ளி மேலாண்மைக் குழு நிர்வாகிகள், கிராமக் கல்விக் குழு நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் வி.டி.பழனிவேல், ஆர்.ரவி, பி.சண்முகம், பிரிட்டா மேரி உள்ளிட்டோர் செய்திருந்தனர். ஆசிரியர் எஸ்.ஜாஹிர் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai