Enable Javscript for better performance
ஆசிரியைக்கு கத்திக்குத்து: பள்ளி மாணவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளூர் அருகே, டியூஷனில் சேர்க்க மறுத்த ஆசிரியையை கத்தியால் குத்திய பள்ளி மாணவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.
    வேப்பம்பட்டு கணேசன் நகரைச் சேர்ந்தவர் அம்பிகா(55) . இவர் அப்பகுதியில் 30 ஆண்டுகளாகப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டியூஷன் நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர் அனிஷ் (13). இவர், கடந்த ஆண்டு அம்பிகாவிடம் டியூஷன் படித்தாராம். இந்நிலையில், இந்த ஆண்டும் கணக்கு பாடம் கற்றுக்கொடுக்கும்படி கேட்டுள்ளார். இதற்கு ஆசிரியை தனக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் பாடம் நடத்த முடியவில்லை என்று கூறி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர், தன் பையில் வைத்திருந்த கத்தியை எடுத்து அம்பிகாவின் கழுத்தில் குத்தியதாகக் கூறப்படுகிறது. அவரது அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வந்து படுகாயம் அடைந்த அம்பிகாவை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
    இதுகுறித்து அம்பிகா செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் அனிஷை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai