Enable Javscript for better performance
இலவச மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    திருத்தணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
     திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சார்பில், திருத்தணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற முகாமை ஒன்றிய ஆணையர் லட்சுமணன் தொடங்கி வைத்தார். இதில், மருத்துவர்கள் கணபதி, ஹேமலதா, ரஃபேல் சாமுவேல், கண் பரிசோதகர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 12 பேர் கலந்து கொண்டு மொத்தம் 120 பேருக்கு சிகிச்சை அளித்தனர்.
     முகாமில், ஈ.சி.ஜி., மூட்டு வலி, இடுப்பு வலி, காது, மூக்கு, தொண்டை, கர்ப்பப்பை நோய், நுரையீரல், ரத்த குறைபாடு, தோல் வியாதி போன்றவை சம்பந்தமான ஆலோசனைகளும், மருந்துகளும் வழங்கப்பட்டன.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai