Enable Javscript for better performance
கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை: தலைமைக் காவலர் மாரடைப்பால் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை: தலைமைக் காவலர் மாரடைப்பால் சாவு

    By    பொன்னேரி,  |   Published on : 24th March 2018 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழவேற்காடு அருகே கடலோரப் பாதுகாப்பு ஒத்திகைப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் வெள்ளிக்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தார்.
     பழவேற்காடு பகுதியில் "சாகர் கவாச்' எனும் பெயரில் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை முகாம் வியாழக்கிழமை (மார்ச் 22) முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஒத்திகைப் பணியில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.
     மப்பேடு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த கோபியும் (50) ஒத்திகையில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனிருந்த காவலர்கள் அவரை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
     அப்போது பணியில் இருந்த மருத்துவர்கள், கோபி இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து திருப்பாலைவனம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     மற்றொரு தலைமைக்காவலர் சாவு
     ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் தேவதாஸ்(44). இவர் மத்திய பாதுகாப்பு படையில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை வல்லூர் அனல் மின் நிலையத்தில் தேவதாஸ் பணியில் இருந்தபோது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனிருந்தவர்கள் அவரை சென்னை அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
     இதுகுறித்து, மீஞ்சூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai