Enable Javscript for better performance
குடிநீர் சேமிப்பு விழிப்புணர்வு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளூர் அருகே, சர்வதேச தண்ணீர் தினத்தை முன்னிட்டு, குடிநீர் சேமிப்பு குறித்து பொதுமக்களுக்கான விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
    புல்லரம்பாக்கம் நடுநிலைப்பள்ளி வளாகத்தில், சேவ் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஊராட்சி ஒன்றிய மண்டல வட்டாட்சியர் ஹெலன்சுமதி தலைமை வகித்தார். ஒன்றிய மேற்பார்வையாளர் பிரியா, அறக்கட்டளை நிர்வாகி பிரதாப் , சமூக ஆர்வலர் தமிழ்வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    முகாமில், குடிநீரை பரிசோதனை செய்வது தொடர்பாக பொதுமக்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், தரம் குறைந்த நீரை பயன்படுத்துவதால் என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பது பற்றியும், குடிநீரை வீணாக்காமல் சேமித்தல், மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் சேவ் அறக்கட்டளை நிறுவனத்தினர் இணைந்து செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai