Enable Javscript for better performance
குண்டர் சட்டத்தில் 2 இளைஞர்கள் கைது- Dinamani

சுடச்சுட

    

    பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இளைஞர்கள் 2 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
    திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் (22) . அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் மணிகண்டன் (27). இவர்கள் இருவரும் கடந்த சில நாள்களாக மீஞ்சூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ரோந்து சென்ற போலீஸார் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், இருவர் மீதும் கொலை வழக்கு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் பல காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
    இதையடுத்து, இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கும்படி, எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி ஆட்சியரிடம் பரிந்துரைத்தார். அதன் அடிப்படையில் வழக்குகளை ஆய்வு செய்த ஆட்சியர், அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, அஜித், மணிகண்டன் இருவரையும் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai