Enable Javscript for better performance
தாட்கோ அலுவலகம் இடமாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளூர் பெரிய குப்பத்தில் இயங்கி வந்த தாட்கோ அலுவலகம் , மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இதுவரையில் திருவள்ளூரில், எண்: 19, நீதிபதிகள் காலனி, 2-ஆவது தெரு, பெரியகுப்பம் என்ற முகவரியில் தாட்கோ அலுவலகம் செயல்பட்டு வந்தது. தற்போது, நிர்வாக காரணங்களுக்காகவும், பொதுமக்கள் எளிதில் அணுகும் நோக்கத்திலும் இந்த அலுவலகம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 2-ஆவது தளம் என்ற முகவரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் புதிய முகவரியில் உள்ள தாட்கோ அலுவலகத்திற்கு வந்து திட்ட உதவிகளைப் பெற்று பயனடையுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai