Enable Javscript for better performance
நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட திருமண மண்டபம் அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட திருமண மண்டபம் அகற்றம்

    By DIN  |   Published on : 24th March 2018 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்குன்றம் அருகே நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட திருமண மண்டபத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    செங்குன்றம், அன்னை இந்திரா நகரில் வசிப்பவர் சம்பத்(58). இவர், திருவள்ளூர் மாவட்ட பாமக முன்னாள் செயலாளர். இவர் சில ஆண்டுகள் முன்பு செங்குன்றம் - ஆவடி நெடுஞ்சாலை அருகே சுமார் 21 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளார். பின்னர், அந்த இடத்தில் ஒரு திருமண மண்டபத்தையும் கட்டினார்.
    இந்நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு பாடியநல்லூரைச் சேர்ந்த முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் கே.என்.ராஜா சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். இதில், சம்பத் கட்டிய திருமண மண்டபமும், அதையொட்டி உள்ள காலி இடமும் சர்வே எண்.126 உள்பிரிவு 11-இல் உள்ள நிலம் தமிழக அரசு நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமானது. எனவே, அந்த இடத்தை ஆய்வு செய்து மண்டபத்தை இடித்து இடத்தை மீட்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
    இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், வேணுகோபால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது. இந்நிலையில் திருமண மண்டபம் கட்டிய இடம் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமானது என நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில், பொன்னேரி உதவி ஆட்சியர் சுந்தரமூர்த்தி, வட்டாட்சியர் சுமதி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மதியழகன், உதவி பொறியாளர் கனகராஜ் உள்ளிட்டோர் முன்னிலையில் 3 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு திருமண மண்டபம் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டது. இதனை முன்னிட்டு, பொன்னேரி போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai