Enable Javscript for better performance
மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    அம்பத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் குறை கேட்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
     அம்பத்தூர், மாதவரம், மதுரவாயல், திருவொற்றியூர் ஆகிய தாலுக்காக்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளிடம் குறைகேட்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதில், திருமங்கலம் - அம்பத்தூர் தொழிற்பேட்டை சாலையிலுள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முகாமில், 56 மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
     இந்த மனுக்களை ஆட்சியருக்கு அனுப்பி வைத்து தீர்வு காணப்படும் எனவும், மேலும், மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்தமாதம் நடைபெறும் முகாமில் தெரிவிக்கப்படும் எனவும் கோட்டாட்சியர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். தொடர்ந்து, முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு, பொது மருத்துவச் சோதனை, கண் பரிசோதனை ஆகியவை நடைபெற்றன. இதில், உதவி ஆட்சியர் ( பயிற்சி ) மேக்ராஜ், அம்பத்தூர், மதுரவாயல், மாதவரம், திருவொற்றியூர் பகுதி வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai