Enable Javscript for better performance
மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    அம்பத்தூரில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நபர்களை, போலீஸார் தேடி வருகின்றனர்.
    அம்பத்தூர் கள்ளிகுப்பம் கிழக்கு பாலாஜி நகர் 4 வது தெருவில் உள்ள தனியார் அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிப்பவர் சந்திரன் (70). ஓய்வுபெற்ற தனியார் நிறுவன அதிகாரி. இவரது மனைவி வத்சலா (63). இருவரும் தனியாக வசித்து வருகின்றனர்.
    இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை, வழக்கம்போல் சந்திரன் நடைப் பயிற்சிக்குச் சென்றார். வீட்டில் வத்சலா மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது அழைப்பு மணி சப்தம் கேட்டு கதவை திறந்தார்.
    அங்கு நின்றிருந்த ஒரு இளைஞர், தண்ணீர் குழாயில் அடைப்பை சரி செய்ய வந்ததாகக் கூறி, வீட்டினுள் அத்துமீறி நுழைய முயன்றார். எங்கள் வீட்டில் எந்த பிரச்னையும் இல்லை என்று கூறி அவர் கதவை சாத்த முற்பட்டபோது, வத்சலாவின் கழுத்திலிருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார். கீழே இரு சக்கர வாகனத்துடன் தயாராக ஒரு இளம் பெண் இருந்தார். அதில் ஏறி இருவரும் தப்பிச்சென்றனர்.
    இதுகுறித்து, அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சங்கிலியை பறித்துச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai