Enable Javscript for better performance
வீடு புகுந்து நகை, பணம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    அம்பத்தூரில், வீடு புகுந்து, நகை, பணத்தை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
    அம்பத்தூர் சத்தியா நகர் 4 ஆவது தெருவைச் சேர்ந்தவர்
    அர்ஜுனன் (59). இவரது மனைவி ரோஜா (50). இவர்கள் இருவரும் உணவு விடுதி நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல் வீட்டைப் பூட்டி விட்டு, இருவரும் உணவகத்திற்குச் சென்றனர். அப்போது மர்மநபர்கள் வீட்டுப் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 10 சவரன் நகை மற்றும் ரூ.63 ஆயிரத்தை திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
    வீடு திறந்து கிடப்பதைப் பார்த்து, அருகில் வசிப்பவர்கள் செல்லிடப்பேசி மூலம் அர்ஜுனனுக்கு தகவல் கொடுத்தனர்.
    இதுகுறித்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் அர்ஜுனன் அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் பொற்கொடி விசாரணை நடத்தி வருகிறார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai