Enable Javscript for better performance
அரசுப் பள்ளி நூற்றாண்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    கும்மிடிப்பூண்டியை அடுத்த மாநெல்லூரில் உள்ள ஊராட்சி தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
    மாநெல்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தொடங்கி நூறாண்டுகள் ஆகிறது. இந்த பள்ளியானது கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட்ட பள்ளிகளில் முதலாவது பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது. இதன் நூற்றாண்டு விழாவுக்கு பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் டி.தீனதயாளன் தலைமை வகித்தார். கிராம கல்வி குழுத் தலைவர் எஸ்.கோபி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் வி.எஸ்.சாந்தி, ஓய்வு பெற்ற வருமான வரி அலுவலர் இ.ராமச்சந்திரன், பொதுப்பணி துறை அதிகாரி டி.தேவி விஸ்வநாதன், குடிசை மாற்று வாரிய அதிகாரி எஸ்.டி.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    தலைமை ஆசிரியர் கே.மெட்டில்டா வரவேற்றார். ஆசிரியர் ஆறுமுக ஜோதி பள்ளி அறிக்கையை வாசித்தார். நிகழ்வில் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் முனிராஜசேகர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.பாஸ்கர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் புனிதவதி, பத்திரிகையாளர் மோ.கணேசன், ஆசிரியர் பயிற்றுநர் ஈவ்லின் பூர்ணிமா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
    நிகழ்வில், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இணை இயக்குநர் வாசு பங்கேற்று, மாவட்ட அளவில் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவி பவானிக்கும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கும் பதக்கம் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
    தொடர்ந்து மாணவர்களின் வில்லுப்பாட்டு உள்ளிட்ட கலை
    நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியர் மவுண்ட்பேட்டன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஹேமாவதி, மாதவி, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை மற்றும் கிராம கல்வி குழு நிர்வாகிகள் ஆகியோர் செய்திருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai