Enable Javscript for better performance
கனிம வளத் திருட்டில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர்:  ஆட்சியர் எச்சரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    கனிம வளத் திருட்டில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர்:  ஆட்சியர் எச்சரிக்கை

    By DIN  |   Published on : 31st March 2018 08:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்படுகைகள், புறம்போக்கு நிலங்கள் மற்றும் பட்டா நிலங்களில் கனிம வளங்களைத் திருடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் நடவடிக்கை தொடரும் என ஆட்சியர் எ.சுந்தரவல்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  இம்மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்படுகைகள், அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் பட்டா நிலங்களில் பலரும் கனிமங்களைத் திருடி வாகனங்களில் எடுத்துச் செல்வதாக புகார்கள் வருகின்றன. இதன் அடிப்படையில் ஆட்சியர் உத்தரவின் பேரில், கொசஸ்தலை ஆறு, ஆரணி ஆறு மற்றும் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் வருவாய்த்துறையினர் குழுக்கள் அமைத்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 
    இதுவரையில், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கனிமங்களைத் திருடிச் சென்றபோது பிடிபட்ட லாரிகள், டிராக்டர்கள் உள்ளிட்ட 313 வாகனங்கள் மற்றும் 69 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், 142 பேர் மீது குற்றவியல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், அவர்களிடமிருந்து கனிம வள விதிமுறையின் படி ரூ.63 லட்சத்து 17 ஆயிரம் வரையில் அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது.
    இந்த ஆண்டில் இக்குற்றச்செயலில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 
    தொடர்ந்து, ஆற்றுப்படுகைகள், அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் பட்டா நிலங்களில் உரிய அனுமதியின்றி கனிமங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல்,  வருவாய்துறையினர், கனிமவளத்துறையினர் மற்றும் காவல்
    துறையினர் அனைவரும் தீவிர ரோந்து பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கனிம வளத் திருட்டில்  ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச்சட்டப்படி நடவடிக்கை எடுப்பது தொடரும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai