Enable Javscript for better performance
கல்லூரியில் கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளூர் அருகே கொழுந்தளூர் வெங்கடேஸ்வரா தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. 
    இக்கருத்தரங்கிற்கு கல்லூரியின் தாளாளர் என்.வெங்கடேசன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் என்.வி.ஆனந்தகுமார் முன்னிலை வகித்தார். இதில், அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.செந்தில்குமரன் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், பல்வேறு பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர் . 
    இதில் பேராசிரியர் குழுவினரால் தேர்வு செய்யப்பட்ட 3 கட்டுரைகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் சரவணன், பேராசிரியர்கள் சந்திரசேகரன், உஷாராணி, குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வெங்கடேஸ்வரா இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai