Enable Javscript for better performance
காதல் ஜோடி தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    மீஞ்சூர் அருகே ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டனர்.
    மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு புது நகரைச் சேர்ந்தவர் ஆகாஷ் (21). இவர் 12-ஆம் வகுப்பு வரை படித்து விட்டு அத்திப்பட்டு பகுதியில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ரம்யா (19). இவர், அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருவரின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனராம். 
    இந்நிலையில், ஆகாஷ், ரம்யா இருவரும் வெள்ளிக்கிழமை, அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். தகவலறிந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார் அங்கு சென்ற இருவரின் சடலங்களையும் மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai