Enable Javscript for better performance
சாலை விபத்தில் இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    அம்பத்தூர் அருகே, பைக்கில் சென்ற இளைஞர் பாடி மேம்பாலம் அருகே தவறி விழுந்ததில் உயிரிழந்தார்.
    வில்லிவாக்கத்தை அடுத்துள்ள தாதன்குப்பம் புதுத் 
    தெருவைச்சேர்ந்தவர் கலைச்செல்வன் (22). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர் புதன் கிழமை இரவு பணிமுடிந்து தனது பைக்கில் பாடி மேம்பாலம் வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறிக் கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். 
    விபத்து குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai