Enable Javscript for better performance
நீட் தேர்வுக்கு பதிவு செய்த மாணவர்களுக்கு ஏப்.4-க்குள் மடிக்கணினி: அரசு உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    நீட் தேர்வுக்கு பதிவு செய்த மாணவர்களுக்கு ஏப்.4-க்குள் மடிக்கணினி: அரசு உத்தரவு

    By DIN  |   Published on : 31st March 2018 04:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    laptop

    நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மடிக்கணினிகள்.

    நீட் தேர்வுக்கு பதிவு செய்த பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிக்கு முன்னதாக ஏப்ரல் 4-ஆம் தேதிக்குள் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கவும், 30 நாள்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதியுடன் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலர் த.ராஜேந்திரன் தெரிவித்தார். 
    பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தொடுவானம் திட்டம் மூலம் அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு மட்டும் பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் வினாக்கள் அடங்கிய கையேடுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. 
    இந்த கையேடுகள் மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் உள்பட பல்வேறு போட்டித் தேர்வுகளை எளிதாக அணுக முடியும். இதுவரையில் நீட் தேர்வுக்காக பெயர் பதிவு செய்த மாணவர்களுக்கு ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் 4 பாகங்கள் வரையில் சிறப்பு கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன. 
    இதேபோல், மாநில அளவில் தனியார், மெட்ரிக் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களில் 70 ஆயிரத்து 412 பேர் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர். இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் 3 மாவட்டங்களுக்கு ஒரு மையம் அமைத்து பொதுத்தேர்வு முடிந்ததும் ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் நீட்தேர்வுக்கான பயிற்சி வகுப்பு தொடங்க இருக்கிறது. 
    இந்த மாணவர்களுக்கு இணையதள வசதியுடன் நவீன மென்பொருள் பொருத்திய விலையில்லா மடிக்கணினிகள் வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
    இதுகுறித்து திருவள்ளூர் மாவட் ட முதன்மைக் கல்வி அலுவலர் த.ராஜேந்திரன் கூறியது: இம்மாவட்டத்தில் தொடுவானம் திட்டத்தின் கீழ் 3,837 மாணவ, மாணவிகள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 443 மாணவ, மாணவிகளுக்கு மட்டும் பொதுத்தேர்வு முடிந்ததும் ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் தொடர்ந்து 30 நாள்களுக்கு உணவு, உறைவிட வசதியுடன் நீட்தேர்வுக்கான பயிற்சி வகுப்பு தொடங்க இருக்கிறது. 
    இதற்காக மாணவர்களுக்கு வழங்க 443 மடிக்கணினிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பயிற்சிக்கு முன்னதாக ஏப்ரல் 4-ஆம் தேதிக்குள் மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட இருக்கின்றன. இதில் தமிழ்ப் பிரிவில் சென்னை, திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு திருவள்ளூர் அருகே கவரப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி வளாகத்திலும், இதே மாவட்டங்களைச் சேர்ந்த ஆங்கிலப் பிரிவு மாணவர்களுக்கு சென்னை-பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரி வளாகத்திலும் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai