Enable Javscript for better performance
பெண்ணிடம் 5 சவரன் நகை பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஆவடி அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 சவரன் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 
    ஆவடி சேக்காடு தனலட்சுமிநகரைச் சேர்ந்த பூபாலனின் மனைவி ஜானகி (24). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மாதம் ஆகிறது. இந்நிலையில் பூபாலன் வியாழக்கிழமை காலை வேலைக்குச் சென்றபின், ஜானகி வில்லிவாக்கத்திலுள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டு மாலை ஆவடிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். 
    அப்போது, பைக்கில் வந்த 2 பேர் ஜானகியின் கழுத்திலிருந்த 5 சவரன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றதாகக் கூறப்படுகிறது. 
    இதுகுறித்து ஆவடி காவல் ஆய்வாளர் முருகேசனிடம் ஜானகி அளித்த புகாரின் பேரில் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai