Enable Javscript for better performance
போதைப் பொருள் கடத்தல் 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    புழல் அருகே, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனர். 
    புழல் காவல் ஆய்வாளர் நடராஜ், வியாழக்கிழமை மாலை சரஸ்வதி நகர் 3-ஆவது தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஒரு காரில் இருந்து 2 இளைஞர்கள் மூட்டைகளை இறக்கிக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட ஆய்வாளர் சந்தேகத்தின்பேரில் அந்த மூட்டைகளை ஆய்வு செய்த போது, அதில் அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக் , குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் இருந்தன. 
    விசாரணையில், சிவகாசியைச் சேர்ந்த கண்மணி(30), வசந்த்குமார் (38) ஆகிய இருவரும் புழல் சரஸ்வதி நகரில் வாடகை வீட்டில் தங்கி, போதைப் பொருள் கடத்தல் மற்றும் விநியோகம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, 2 பேரையும் கைது செய்த போலீஸார், இவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும், ரூ.3 லட்சம் மதிப்பிலான 5 மூட்டை போதைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai