Enable Javscript for better performance
மகளிர் கல்லூரி ஆண்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    செங்குன்றம் அருகே ஆர்.பி.கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரி ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 
    செங்குன்றத்தை அடுத்த புள்ளிலைன் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் அமைந்துள்ளது ரத்தன்கன்வர் பவர்லால் கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரி. இக்கல்லூரியின் ஆண்டு விழாவுக்கு கல்லூரியின் செயலாளர் அரிஹந்த்குமார் கோத்தி தலைமை வகித்தார். 2017-18ஆம் ஆண்டு அறிக்கையை கல்லூரி முதல்வர் சீ.மங்கையர்க்கரசி வாசித்தார். நிகழ்வில், கல்லூரி தாளாளர் அஜித்
    குமார்கோத்தி முன்னிலை வகித்தார். 
    விழாவில், கல்லூரி நிறுவனர் பவர்லால்கோத்தி மற்றும் வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் வி.நந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டு அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினர். முதன்மைப் பேராசிரியர் கற்பகம் நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai