Enable Javscript for better performance
வட நாட்டு லேகிய வியாபாரியின் கார் தீவைத்து எரிப்பு- Dinamani

சுடச்சுட

    
    car

    அம்பத்தூர் அருகே, உடல் எடை குறைய லேகியம் விற்பனை செய்த வட நாட்டு வியாபாரியின் காரை எரித்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 
    திருமுல்லைவாயல் திருவீதியம்மன் கோயில் தெருவைச்சேர்ந்தவர் பிரதீப்குமார் (27).நிலத்தரகர். திருமணம் ஆகாதவர். இவரது உடல் பருமனாக இருந்ததால், உடல் எடைகுறையும் என்று வட நாட்டு வியாபாரி காரில் வைத்து விற்பனை செய்த லேகியத்தை வியாழக்கிழமை வாங்கி சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. 
    சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த பிரதீப்குமாரை உறவினர்கள் அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து அவர் வயிற்றுவலியால் துடித்து ரத்தவாந்தி எடுத்துள்ளார். பின்னர் அவரை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பிரதீப்குமார் உயிரிழந்தார். 
    இதனால் ஆத்திரமடைந்த பிரதீப்குமாரின் நண்பர்கள், வட நாட்டு லேகிய வியாபாரியை தாக்கியதுடன் அவரை திருமுல்லைவாயல் காவல்நிலைத்தில் ஒப்படைத்தனர். 
    இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிரதீப்குமாரின் சவஊர்வலம் நடைபெற்றபோது, லேகிய வியாபாரியின் காரை சில பேர் தீவைத்து எரித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் உதவிஆணையாளர் நந்தகுமார் தலைமையிலான போலீஸார் கார் எரிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai