Enable Javscript for better performance
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    சோழவரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை, ரூ. 15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
    சோழவரம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட அலமாதி, எடப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பால்ஜெய்சிங் (45). இவர், தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் தனது குடும்பத்தினருடன் 28-ஆம் தேதி வெளியே சென்று விட்டு, இரவு வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே பீரோவில் இருந்த 8 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகிவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சோழவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai