Enable Javscript for better performance
ஆசிரியர் தகுதித் தேர்வு: பார்வையற்றோருக்கு இலவசப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    ஆசிரியர் தகுதித் தேர்வு: பார்வையற்றோருக்கு இலவசப் பயிற்சி

    By DIN  |   Published on : 18th May 2018 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் நோக்கத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். 
    இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 
    எனவே தகுதியுடைய இம்மாவட்டத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் மே 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். மேலும், பயிற்சியில் சேர விரும்புவோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகி விவரங்களைஅறிந்து கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai