Enable Javscript for better performance
கரும்பு விவசாயிகள்  ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகை ரூ.22 கோடியும், நடப்பாண்டில் தரவேண்டிய, ரூ.15 கோடியும் வழங்கக் கோரி, 100க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் திருவாலங்காடு சர்க்கரை ஆலை முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் 
    ஈடுபட்டனர்.
     திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை திருவாலங்காட்டில் இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கரும்புகளை அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில், நடப்பாண்டில் கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு ரூ.15 கோடியை ஆலை நிர்வாகம் தராமல் பாக்கி வைத்துள்ளது. மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக, கரும்பு விவசாயிகளுக்கு அரசு வழங்கிய வேண்டிய பங்கீட்டு தொகை ரூ.22 கோடி நிலுவையில் உள்ளது.
    தற்போது ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.37 கோடி பாக்கி வைத்துள்ளது. இந்த நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் எனக் கோரி திருவாலங்காட்டில் உள்ள சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் வியாழக்கிழமை முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன் தலைமை வகித்தார். திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் துளசி நாராயணன் வரவேற்றார். இதில், மாவட்டச் செயலாளர் பெருமாள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
    இதைத்தொடர்ந்து, விவசாயிகளுடன் ஆலை நிர்வாகம் நடத்திய பேச்சு வார்த்தையும் தோல்வி அடைந்தது.
     நிலுவைத் தொகையை வழங்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்தனர். இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த திருத்தணி கோட்டாட்சியர் பவணந்தி, டி.எஸ்.பி. சேகர் உள்ளிட்ட அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியும் பலனில்லை. வியாழக்கிழமை மாலை வரை கரும்பு விவசாயிகளின் போராட்டம் நீடித்தது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai