Enable Javscript for better performance
பிளஸ் 2 தேர்வில் 100 % தேர்ச்சி பெற்ற பள்ளி- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யில் பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். அதேபோல், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை நிர்வாகம் சார்பில் ஆசிரியர்கள் பாராட்டினர். 
    மாநில அளவில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. இதில் திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் மேல்நிலைப்பள்ளி 1200-க்கு 1175 மதிப்பெண்களை 10 பேரும், 1150-க்கு மேல் 21 பேரும், 1100-க்கு மேல் 76 பேரும் பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர். அதேபோல் அனைத்து பாடப் பிரிவுகளிலும் 42 பேர் சென்டம் பெற்றுள்ளனர். அதனால் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் அனைவரையும் பள்ளியின் தாளாளர் விஷ்ணுசரண், இயக்குநர் பரணிதரன், முதல்வர் கவிதா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai