Enable Javscript for better performance
பிளஸ்-2 தேர்வு: 100% தேர்ச்சி பெற்ற பள்ளி- Dinamani

சுடச்சுட

    

    கும்மிடிப்பூண்டியில் உள்ள கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து 5-ஆவது முறையாக பிளஸ்-2 தேர்வில் நூறு சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளது.
    கும்மிடிப்பூண்டி காந்திநகர் பகுதியில் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கும்மிடிப்பூண்டி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
    கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த பள்ளியில் பிளஸ்-2 மாணவர்கள் தேர்வில் நூறு சதவீத தேர்ச்சியைப் பெற்றனர். இந்நிலையில், புதன்கிழமை பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தேர்வு எழுதிய 72 மாணவர்களும் தேர்ச்சி பெற்று தொடர்ந்து 5-ஆவது முறையாக நூறு சதவீத தேர்ச்சி என்ற சாதனையை படைத்தார்கள்.
    இதில் 14 பேர் 1100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனர். 34 பேர் 1000 மதிப்பெண்ணிற்கு மேல் பெற்றனர். மேலும், 3 பேர் கணிதம், வணிகவியல், கணக்குப் பதிவியல் பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
     சிறந்த மதிப்பெண்ளை பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் திருஞானம், முதல்வர் தேன்மொழி திருஞானம், நிர்வாகி டாக்டர் ஞானதீபன் ஆகியோர் வாழ்த்தி இனிப்புகளை வழங்கினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai