Enable Javscript for better performance
மருத்துவ அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மருத்துவ அலுவலர்களின் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
    திருவள்ளூர் எம்.ஜி.ஆர் சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரியாநந்தினி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஜோஸ்வின் முன்னிலை வகித்தார். 
    மாநில மற்றும் மாவட்ட அளவில் துறை ரீதியாக மருத்துவ அலுவலர்களுக்கு நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்; அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துதல்,  நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற குடியரசுத் தலைவரிடம் நிரந்தர ஒப்புதல் பெற நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
    இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கத்தின் பொருளாளர் சையது கனியா, நிர்வாகிகள் நாகார்ஜுனா, சைதன்யன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai