காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி மருந்தாளுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளுநர் காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்பட 13 அம்சக் கோரிக்கைகளை

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளுநர் காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்பட 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை அனைத்து மருந்தாளுநர் சங்கத்தினர் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு, தலைமை மருந்தாளுநர் செல்வகுமார் தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில முன்னாள் செயலாளர் அங்கண்ணன், வேலூர் மாவட்ட முன்னாள் செயலாளர் ராஜமணி, மாவட்ட முன்னாள் தலைவர் டி.சேகர்பாபு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் பாண்டுரங்கன், சங்க நிர்வாகிகள் கணேஷ், ருக்மணிதேவன் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர். 
 இதில், காலியாக உள்ள 770 மருந்தாளுநர் பணியிடங்களை அரசு உத்தரவுப்படி நிரப்ப வேண்டும், வட்டார மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்காணிப்பாளர் பணியிடங்களை உருவாக்குதல், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவக் குறியீட்டின்படி கூடுதல் மருந்தாளுநர் பணியிடங்களை உருவாக்குதல் உள்பட 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கமிட்டனர். சங்க நிர்வாகி சுமதி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com