குருவாயல்- அழிஞ்சிவாக்கம் மேம்பாலம் திறப்பு: இனிப்பு வழங்கிய அதிமுகவினர்

பெரியபாளையம் அருகே குருவாயல் - அழிஞ்சிவாக்கம் இடையே ஆரணி ஆற்றின் குறுக்கே ரூ. 13 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் தமிழக முதல்வரால்

பெரியபாளையம் அருகே குருவாயல் - அழிஞ்சிவாக்கம் இடையே ஆரணி ஆற்றின் குறுக்கே ரூ. 13 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் தமிழக முதல்வரால் வெள்ளிக்கிழமை காணொலி மூலம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில், குருவாயல் பகுதியில் பொதுமக்களுக்கு அதிமுக-வினர் இனிப்புகள் வழங்கி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
 பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே குருவாயல் -அழிஞ்சிவாக்கம் கிராமத்தை இணைக்கும் வகையில் அப்பகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையின்படி உயர்மட்ட பாலம் கட்டி முடிக்கப்பட்டது.
 நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் திட்டத்தில் ரூ. 13 கோடி செலவில் 231 மீட்டர் நீளமும், 7.5 மீட்டர் அகலமும் கொண்ட 14 திறப்புகள் கொண்ட உயர்மட்டப் பாலத்தை கட்டும் பணி 2016-ஆம் ஆண்டு முடிக்கப்பட்டு, கடந்த 2 வருட காலமாக திறக்கப்படாமல் இருந்தது.
 இந்நிலையில், இந்த பாலத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி மூலம் திறந்து வைத்தார். பொதுமக்களின் நீண்ட காலக் கோரிக்கையான பாலம் திறக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில், பாலம் திறந்ததும், முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் குருவாயல் தயாளன், அழிஞ்சிவாக்கம் சிவசங்கரன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் நந்தகோபால், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் வெற்றிவேல், உதவி கோட்டப் பொறியாளர் நாராயணன், உதவி பொறியாளர் சதீஷ்குமார் உள்ளிட்டோர், அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com