திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும்: துணை முதல்வர் பன்னீர்செல்வம்

திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என பொன்னேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும்: துணை முதல்வர் பன்னீர்செல்வம்

திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என பொன்னேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
 திருவள்ளூர் மேற்கு, கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பொன்னேரியில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலரும், பொன்னேரி எம்எல்ஏவுமான சிறுணியம் பி. பலராமன் தலைமை வகித்தார். திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலர் அலெக்ஸாண்டர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
 பெரியார், அண்ணா, எம்ஜிஆர் ஆகிய முப்பெரும் தலைவர்கள் வழியில் இந்த இயக்கத்தை வழிநடத்திக் காட்டியவர் ஜெயலலிதா. 1949-ஆம் ஆண்டு பெரியாருடன் மனக்கசப்பு ஏற்பட்டதன் காரணமாக 1952-இல் திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார் அண்ணா. பெரியார் மீது இருந்த பற்று காரணமாக திமுக வுக்கு தலைவர் பதவியை அண்ணா வெற்றிடமாக வைத்திருந்தார். 1967-ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த அண்ணா, 2 வருடங்கள்தான் ஆட்சியை நடத்தினார். அவர் மறைந்த பிறகு, கருணாநிதியை எம்ஜிஆர் முதல்வராக்கினார். அதன் பின்னர், 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கினார் கருணாநிதி.
 இதையடுத்து, வெகுண்டெழுந்த எம்.ஜி.ஆர். அதிமுகவை உருவாக்கினார். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர், பல்வேறு சோதனை, வேதனைகளை முறியடித்து, அதிமுக எனும் இயக்கத்தைக் கட்டி காப்பாற்றி, இந்தியாவின் 3-ஆவது பெரிய இயக்கமாக உருவாக்கினார் ஜெயலலிதா. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அப்படியே அவர் வழியில் மக்களுக்கான திட்டங்களை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. இலங்கையில் நடைபெற்ற போரில் இந்திய அரசு தங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்ததாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபட்ச கூறியுள்ளார். அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், தமிழத்தில் திமுக ஆட்சியும் இருந்தது. இதற்கு மு.க.ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்? காங்கிரஸ் என்ன கூறப்போகிறது?
 திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும். அதன் பின்னர் டிடிவி தினகரனின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வரும் என்றார் அவர்.
 கூட்டத்தில், அமைச்சர் க.பாண்டியராஜன், எம்.பி.கள் வேணுகோபால் (திருவள்ளூர்), கோ.அரி (அரக்கோணம்), எம்எல்ஏ-க்கள் நரசிம்மன் (திருத்தணி), விஜயகுமார் (கும்மிடிப்பூண்டி) மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com