பூத் ஸ்லிப்களை அதிமுகவினரிடம் வழங்குவதாக திமுக எம்எல்ஏ புகார்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பூத் ஸ்லிப்களை பொதுமக்களிடம் வழங்காமல், அதிமுகவினரிடம்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பூத் ஸ்லிப்களை பொதுமக்களிடம் வழங்காமல், அதிமுகவினரிடம் ஆசிரியை ஒருவர் வழங்குவதாக மாவட்ட தேர்தல் அலுவலரிடம் திருவள்ளூர் சட்டப் பேரவை உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் புகார் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் மாவட்டத் தேர்தல் அலுவலர் மகேஸ்வரி ரவிகுமாரிடம் வெள்ளிக்கிழமை அளித்த புகார் மனு:
திருவள்ளூர் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அரசுப் பணியாளர்கள் மூலம் பூத் ஸ்லிப்புகளை வீடுகள் தோறும் விநியோகம் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில், ஒரு சில இடங்களில் இப்பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் அதிமுகவினரிடம் அளிப்பதாக புகார் எழுந்துள்ளன. 
இதில் திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருவள்ளூர் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள மருதவல்லிபுரம் கிராம வாக்குச்சாவடியில் ஆசிரியை ஒருவர் பூத் ஸ்லிப்புகளை அதிமுக நிர்வாகிகளிடம் விநியோகம் செய்துள்ளார். தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறி நடந்து கொண்ட அந்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்டத் தேர்தல் அலுவலர் மகேஸ்வரி ரவிகுமார் கூறுகையில், "தற்போது பொதுமக்களுக்கு வீடுகள் தோறும் அரசு பணியாளர்கள் மூலம் பூத் ஸ்லிப்புகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதில் விதிமுறைகளை மீறி ஆசிரியை ஒருவர் பூத் ஸ்லிப்புகளை குறிப்பிட்ட அரசியல் கட்சியினரிடம் விநியோகம் செய்வதாக திருவள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரனிடம் இருந்து புகார் வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.    
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com