சுடச்சுட

  

  திருவள்ளூர் அருகே சிறுமியை ஆட்டோவில் கடத்திச் சென்று கூட்டாக மானபங்கம் செய்ய முயற்சித்ததாக 2 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய இளைஞர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
   திருவள்ளூர் அருகே பட்டரை கிராமத்தில் 17 வயது சிறுமி ஒருவர் செவ்வாய்க்கிழமை சுற்றித் திரிந்தாராம். இதை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் நோட்டமிட்டு, அவரிடம் பேச்சுக் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து, 3 பேர் சேர்ந்து சிறுமியை திடீரென ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு, அதிகத்தூர் ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு 3 பேரும் சேர்ந்து சிறுமியை, கூட்டாக மானபங்கம் செய்ய முயற்சித்துள்ளனர். இதை அப்பகுதியில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் பார்த்து கூக்குரலிட்டபடி திரண்டு வந்தனர். அதற்குள் 3 பேரும் ஆட்டோவில் தப்பியோடினர்.
   பின்னர், அங்கு சென்று பார்த்தபோது, மயங்கிய நிலையில் கிடந்த சிறுமியை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அந்த சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்தச் சிறுமி கிருஷ்ணகிரியைச்சேர்ந்தவர் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும், அச்சிறுமி எதற்காக இங்கு வந்தார், யாராவது ஏமாற்றி அழைத்து வந்து நடுவழியில் விட்டுச் சென்றார்களா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
   இதற்கிடையே திருவள்ளூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிந்து சிறுமியை மானபங்கம் செய்ய முயன்றதாக, ஏகாட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் (20), அதிகத்தூரைச் சேர்ந்த முனுசாமி (23) ஆகிய இருவரைக் கைது செய்தனர். தலைமறைவான இளைஞர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai