சுடச்சுட

  

  வாக்குச்சாவடி அலுவலர்கள் 3 கட்டங்களாக குலுக்கல் முறையில் தேர்வு

  By DIN  |   Published on : 17th April 2019 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள நிலை அலுவலர்களை கணினி மூலம் 3 கட்டங்களாக குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
  நிகழ்ச்சிக்கு, திருவள்ளூர் மக்களவைத் தொகுதி தேர்தல்  பொதுப் பார்வையாளர் சுரேந்திரகுமார், ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி பொதுப் பார்வையாளர் தேபாசிஸ் தாஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். பூந்தமல்லி சட்டப்பேரவை இடைத்தேர்தல் பார்வையாளர் ஷோபா முன்னிலை வகித்தார். இதில் மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மகேஸ்வரி ரவிகுமார் பேசியது:
  திருவள்ளூர் மக்களவைத் தொகுதி தேர்தலுடன், பூந்தமல்லி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவும் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, இம்மாவட்டத்துக்கு உள்பட்ட 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 3,603 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்தல் பணியில் 19 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தற்போது, மூன்றாம் கட்டமாக குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
  இதில் எந்த வாக்குச் சாவடிகளில் பணி அமர்த்தப்படுகிறோம் என்ற விவரம், தேர்தலுக்கு முதல் நாளில் கடிதம் வழங்கும்போதே அலுவலர்களுக்குத் தெரியவரும். 
  அதனால் எந்த வாக்குச்சாவடிகளில் பணி வழங்கினாலும், அங்கு தவறாமல் பணியாற்றத் தயாராக வர வேண்டும் என அவர் தெரிவித்தார். அப்போது, பூந்தமல்லி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், திருவள்ளூர் சார் ஆட்சியருமான ரத்னா மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai