சுடச்சுட

  

  வாக்குச் சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை

  By DIN  |   Published on : 17th April 2019 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் நடைபெறும் வாக்குப் பதிவை வாக்குச் சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க இருப்பதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். 
  இத்தேர்தலுக்காக மொத்தம் 3,603 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், கும்மிடிப்பூண்டி, திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதிகளில் மிகவும் பதற்றம் நிறைந்த 9 வாக்குச் சாவடி மையங்களும், மிதமான பதற்றம் நிறைந்த 166 வாக்குச் சாவடிகளும் கண்டறியப்பட்டுள்ளன.
  இந்த வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தயாராக வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், வாக்குப் பதிவு நாளில் இந்த வாக்குச்சாவடிகளின் அனைத்து நடவடிக்கைகளையும் கட்டுப்பாடு அறை அமைத்து, தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டத் தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai