Enable Javscript for better performance
பூண்டி ஏரிப் பகுதியில் பராமரிப்பின்றியுள்ள பலன் தரும் மரங்கள்: அரசுக்கு வருவாய் இழப்பு- Dinamani

சுடச்சுட

    

    பூண்டி ஏரிப் பகுதியில் பராமரிப்பின்றியுள்ள பலன் தரும் மரங்கள்: அரசுக்கு வருவாய் இழப்பு

    By DIN  |   Published on : 24th April 2019 11:47 PM  |   அ+அ அ-   |    |  


    திருவள்ளூர் அருகே பூண்டி ஏரிப் பகுதியில் மா, புளி, நாவல், பனை உள்ளிட்ட பல்வேறு பலன் தரும் மரங்கள் பராமரிப்பு இல்லாததால், அரசுக்கு கடந்த 4 ஆண்டுகளாக வருவாய் இழப்பு  ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
    திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலையோரம் பூண்டி ஏரிப் பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் மா, புளி மற்றும் நாவல் மரங்கள் உள்ளிட்ட பலன் தரும் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் கொண்ட தோப்புகள் உள்ளன. இந்த மரங்கள் ஏரியில் நீர் இருக்கும் நேரங்களில் செழிப்புடன் காணப்படும். மேலும், இந்த பலன் கொடுக்கும் மரங்களை ஆண்டுதோறும் ஏலம் விடுவதன் மூலம், அரசுக்கு கூடுதலாக ரூ. 1.50 லட்சம், குறைந்தது ரூ. 1 லட்சம் வரையிலும் வருவாய் கிடைத்து வந்தது. 
     இதற்கு முன்பு வரை சாலையோரத்தில் இருந்து பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, மரங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன. அதனால் பலன் தரும் மரங்களின் மகசூலை ஏலம் எடுப்பவர்கள் பயன்படுத்தி வந்தனர். அத்துடன், ஏரிப் பகுதியோரங்களில் தோட்டம் வைத்திருப்போர் ஆக்கிரமிப்புச் செய்வதாகக் கூறப்படுகிறது. தற்போதைய நிலையில், இங்குள்ள மா மரங்களில் நன்றாக காய்த்து தொங்குகிறது. ஆனால், பாதுகாப்பற்ற நிலையில் திறந்த வெளியில் மரங்கள் உள்ளன. இதற்கு முன்பு வரை, ஆண்டுதோறும் ரூ. 1 லட்சம் வரையில் ஏலம் மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்து வந்தது. தற்போது சாலையில் செல்வோர் மற்றும் பலர் மாங்காய்களை பறித்துச் செல்லும் சூழ்நிலையுள்ளது. அத்துடன், மாலை நேரங்களில் மது அருந்தும் இடமாகவும் இப்பகுதி மாறி வருவதால், ஏலம் எடுப்பதற்கு யாரும் முன்வராத நிலை உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
     இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மாரிராஜன் கூறியது:
     இதற்கு முன்பு வரையில் ஆண்டுதோறும் ஏலம் விடப்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு வர்தா புயலின்போது, மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன. மேலும், பல்வேறு வகையான மரங்கள் வேருடன் சாய்ந்தன. தற்போதைய நிலையில் புயலில் தப்பிய நிலையிலும் அதிகளவில் பலன் கொடுக்கும் மா மரங்களாகவே உள்ளது. அத்துடன் பாதுகாப்பின்றி திறந்த வெளியில் இருப்பதால் அனைவரும் உள்ளே ல்புகும் இடமாக மாறி வருகிறது. இதனால் ஏலம் எடுப்பவர்கள் பலன் பெற முடியாத நிலை இருப்பதால் ஏலம் எடுக்க யாரும், முன்வருவதில்லை. அதனால், பொதுப்பணித் துறை குறிப்பிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதுகாப்பு வேலி அமைத்து பலன் தரும் மரங்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வருங்காலங்களில் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றார்.       
    இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியது:
     ஏற்கெனவே கடந்த வர்தா புயலின்போது, பலன் தரும் மரங்கள் சாய்ந்தும், கிளைகள் முறிந்தும் விழுந்தன. அத்துடன், இப்பகுதி வேலிகள் இன்றி திறந்த வெளியாக இருப்பதால் யாரும் ஏலம் எடுக்கவும் முன்வரவில்லை. இதைக் கருத்தில் கொண்டு ஏரியின் அடிவாரப்பகுதியான திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலையில், பலன் தரும் மரங்கள் உள்ள பகுதிகளில் வருவாய்த் துறை மூலம் சர்வே செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அப்பணிகள் முடிந்ததும் பாதுகாப்பு வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், சுற்றுலாத் தலமாக்கும் வகையில் பலன்தரும் மரங்கள் அகற்றப்படாமல் அப்படியே செயற்கை நீருற்றுகள், பூங்கா இருக்கைகள் அமைக்கவும் திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp