முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
பொன்னியம்மன் கோயிலில் தீமிதி விழா
By DIN | Published On : 04th August 2019 01:19 AM | Last Updated : 04th August 2019 01:19 AM | அ+அ அ- |

கும்மிடிப்பூண்டியை முத்தியால்கண்டிகை பொன்னியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை தீமிதி விழா நடைபெற்றது.
ஓம் சக்தி தங்கவேல் பக்த ஜன சபா சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஸ்ரீ மாரி அம்மனுக்கு 7-ஆம் ஆண்டு தீமிதி விழா மற்றும் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு 26-ஆம் ஆண்டு வேல் தரிப்பு விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை பக்தர்கள் பால்குடம் சுமந்தும், தீச்சட்டி ஏந்தியும் பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்.
வெள்ளிக்கிழமை காப்பு கட்டிய பக்தர்கள் அம்மனை வேண்டி தீமித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
தொடர்ந்து அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் முத்தியால்ரெட்டிக் கண்டிகை மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.