சுடச்சுட

  

  திருத்தணி நகராட்சியில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள 5 குளங்கள் தூர்வாரி சீரமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. 
  நோபல் பவுண்டேஷன் தொண்டு நிறுவனம் சார்பில் மேல் திருத்தணியில் அமைந்துள்ள கொட்டுக்குளம் தூர்வாரும் பணிகளை நிறுவனத் தலைவர் கலைமாமணி புதன்கிழமை தொடங்கி வைத்தார். 
  முன்னதாக திருத்தணி நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி நகராட்சிக்குள்பட்ட மற்ற குளங்களையும் தூர்வாரி சீரமைத்து தரும்படி நோபல் பவுண்டேஷன் தொண்டு நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். 
  அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் உத்தரவின்பேரில் முதற்கட்டமாக மேல்திருத்தணி கொட்டுக்குளத்தை தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. 
  இந்நிகழ்ச்சியில், முன்னாள் நகர் மன்றத் தலைவர் டி. செளந்தர்ராஜன், நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
  இதனை தொடர்ந்து நகராட்சிக்குள்பட்ட வள்ளியம்மா குளம், ராமஞ்சா குளம், செட்டிக்குளம், நல்லாங்குளம் ஆகிய குளங்கள் அடுத்தடுத்து தூர்வாரி சீரமைக்கப்பட உள்ளதாக நோபல் பவுண்டேஷன் தொண்டு நிறுவனத் தலைவர் கலைமாமணி தெரிவித்தார். 
   நிகழ்ச்சியில் திருத்தணி முன்னாள் நகர்மன்ற கவுன்சிலர் சுமதிபுஷ்பராஜ், கிராம நிர்வாக அலுவலர் யாசர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
  பொன்னேரியில் தர்மாவரம் குளம் சீரமைக்கும் பணி தொடக்கம்: குடிமராமத்துத் திட்டத்தின் கீழ்  தர்மாவரம் குளம்  சீரமைக்கும் பணியை பொன்னேரி எம்எல்ஏ துவக்கி வைத்தார். 
  தர்மாவரம் கிராமத்தில் உள்ள குளத்தை குடிமராமத்து திட்டத்தின் மூலம் சீரமைக்கும் பணியினை பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் புதன்கிழமை தொடங்கி வைத்தார். 
  அதன் தொடர்ச்சியாக பொன்னேரி வட்டம், சோழவரம் ஒன்றியம் பண்டிகாவனூர் ஊராட்சியில் உள்ள தர்மாவரத்தில் உள்ள குளம் ரூ.2.50 லட்சம் மதிப்பில் தூர்வாரி சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. 
  அதன்படி குளத்தின் கரைகளை செப்பனிட்டும், ஆழப்படுத்தியும் சீரமைக்கும் குடிமராமத்துப் பணிகளை பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பொன்னேரி வட்டாட்சியர் எட்வர்ட் வில்சன், சோழவரம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், சோழவரம் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் கார்மேகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai