நாயுடுகுப்பம் ஏரியை தூர்வாரும் பணி தொடக்கம்

கும்மிடிப்பூண்டி அடுத்த எகுமதுரை ஊராட்சிக்குள்பட்ட நாயுடுகுப்பம் ஏரியில் தூர் வாரும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. 

கும்மிடிப்பூண்டி அடுத்த எகுமதுரை ஊராட்சிக்குள்பட்ட நாயுடுகுப்பம் ஏரியில் தூர் வாரும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. 
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவின் பேரில் 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நாயுடுகுப்பம்  ஏரியின் தூர்வாரும் பணியை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் மண்வெட்டியில் மண்ணை அள்ளித் தொடங்கி வைத்தார். 
நிகழ்வில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக செயலர் கோபால்நாயுடு, அதிமுக நிர்வாகிகள் மு.க. சேகர், டி.சி. மகேந்திரன், ரமேஷ்குமார்,  வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமார், எகுமதுரை ஊராட்சி செயலர் சோபன்பாபு, ஒன்றியப் பொறியாளர் நரசிம்மன், எகுமதுரை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரகு முன்னிலை வகித்தனர்.
ஏரி தூர்வாரும் பணியை 1 மாத காலத்திற்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  இந்நிகழ்வில் நாயுடுகுப்பம் மக்கள் திரளாக பங்கேற்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com