மன்னடி பவானி அம்மனுக்கு 108 பால் குடம்

ஆரணி பேரூராட்சி பஜார் தெருவில் அமைந்துள்ள மன்னடி பவானி அம்மனுக்கு ஆடி மாதக் கடைசி வெள்ளிக்கிழமையொட்டி பால்குட ஊர்வலம் நடைபெற்றது. 

ஆரணி பேரூராட்சி பஜார் தெருவில் அமைந்துள்ள மன்னடி பவானி அம்மனுக்கு ஆடி மாதக் கடைசி வெள்ளிக்கிழமையொட்டி பால்குட ஊர்வலம் நடைபெற்றது. 
காணியம்மன் கோயில் இருந்து தொடங்கிய இந்த பால்குட ஊர்வலத்தில் விரதமிருந்த பெண் பக்தர்கள் 108 பால்குடங்களைத் தலையில் சுமந்தவாறு பஜார் வீதி வழியாகச் சென்று பவானி அம்மன் கோயிலை அடைந்தனர். பின்னர், அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. சனிக்கிழமை காலை வருணயாகமும், தீப ஆராதனையும் நடைபெறும்.  
ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு காலைக் கூழ்வார்த்தல், மதியம் அன்னதானம், இரவு  இசைக்கச்சேரி, கும்பம்,  அம்மன் திருவீதி உலாவும் நடைபெறும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com