Enable Javscript for better performance
இடையான்குளம் தூர்வாரும் பணி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    கும்மிடிப்பூண்டியை அடுத்த சிறுபுழல் பேட்டையில் உள்ள இடையான் குளத்தைத் தூர்வாரும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. 
    சிறுபுழல்பேட்டையில் உள்ள இளைஞர்கள் பொது நலச் சங்கத்தினர் அப்பகுதியில் உள்ள 5 ஏக்கர் பரப்பிலான இடையான்குளத்தை தூர்வார அனுமதிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.
    இதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்ததை அடுத்து, இடையான் குளத்தை தூர்வாரும் பணியை இளைஞர்கள் பொது நலச் சங்கத்தினர் வியாழக்கிழமை தொடங்கினர்.
    சங்க நிர்வாகிகள் கவிராஜ், விஜயன் ஆகியோர் தலைமை வகித்தனர். 
    சிறப்பு அழைப்பாளராக சிறுபுழல்பேட்டை முன்னாள் ஊராட்சித் தலைவர் ரவிக்குமார் பங்கேற்று பணியைத் தொடங்கி வைத்தார். குளத்தைத் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai