Enable Javscript for better performance
கிருஷ்ண ஜயந்தி கொண்டாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஆரணி பஜார் தெருவில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. 
    இதையொட்டி, கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்கார தீபாரானை நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தார். குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிவித்து வந்தனர். தொடர்ந்து, கிருஷ்ணன் கதைகள், பாட்டு, பஜனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
    அதேபோல், கொசவன்பேட்டையில் உள்ள பஜனை கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா  கொண்டாடப்பட்டது. இதில், கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் சாமி பெருமாள் கோயில் தெரு, விநாயகர் கோயில் தெரு, சிவன் கோயில் தெரு வீதி வழியாக வலம் வந்தார். தொடர்ந்து, உறியடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    திருத்தணியில்...
    திருத்தணி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கிருஷ்ண ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
    திருத்தணி புறவழிச் சாலையில் யாதவ மகா ஜன சங்கம் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற கிருஷ்ண ஜயந்தி விழாவில் கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு, சங்கத் தலைவலர் சுப்பிரமணி, முன்னாள் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் முனிரத்தினம், திருத்தணி ஒன்றிய முன்னாள் துணைத் தலைவர் நாராயணன் ஆகியோர் அன்னதானம் வழங்கினர்.
    ஓய்வு பெற்ற உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கிருஷ்ணசாமி உளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோல், திருத்தணி மேட்டுத் தெருவில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    சந்தான வேணுகோபாலபுரம் கிராமத்தில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலில், மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai