Enable Javscript for better performance
கூட்டுப் பண்ணைய உழவர் உற்பத்தியாளர்கள் பொதுக்குழுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கூட்டுப் பண்ணைய உழவர் உற்பத்தியாளர்கள் பொதுக்குழுக் கூட்டம்

    By DIN  |   Published on : 24th August 2019 04:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    திருத்தணி ஆசிரியர் நகரில் உள்ள விவசாய கூட்டுப் பண்ணைய உழவர் உற்பத்தியாளர் அலுவலகத்தில் கூட்டுப் பண்ணைய உழவர் உற்பத்தியாளர்கள் பொதுக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
    சங்கத் தலைவர் ஆறுமுகம் வரவேற்றார். இயக்குநர்கள் ராமு, ஜெயராம் ராஜூ, சண்முகம், தனபால், கோமளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் வணிக துணை இயக்குநர் அபுபக்கர் பேசுகையில், பங்குதாரர்களுக்கு குறைந்த விலையில் தரமான விதைகள், பூச்சிக் கொல்லி உரங்கள் விற்பனை செய்யப்படும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களை திருத்தணி உற்பதியாளர் நிறுவனத்தின் மூலம் கொள்முதல், சந்தைப்படுத்தல் மற்றும் மதிப்புக் கூட்டுதல் செய்து, அதிக லாபத்தில் விற்பனை செய்யலாம் என்றார் அவர்.
    வேளாண்மை அலுவலர் செண்பகவள்ளி, உதவிச் செயற்பொறியாளர் ராஜவேல், வேளாண் உதவி அலுவலர்கள் பன்னீர்செல்வம், சேகர், திட்ட ஒருங்கிணைப்பாளர் கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தலைமை செயல் அலுவலர் கிரிதரன் நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai